திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் துறை சமுதாய கூடத்தில் காவல்துறை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் அப்போலோ மருத்துவமனை சார்பில் இன்று ( 13.07.2023 )நடந்தது. முகாமை மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா தொடங்கி வைத்தார். முகாம் இன்று முதல் 18-ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில் டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இதய அழுத்த சோதனை, ஆடியோ மெட்ரிக், எக்கோ, இ.சி.ஜி . பரிசோதனை, ரத்த மாதிரி சேகரிப்பு போன்ற பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவ குழுமத்தின் மதுரை மண்டல தலைமை செயல் அதிகாரி நீலக்கண்ணன், மருத்துவர் சிவம், மார்க்கெட்டிங் மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன், ஜி.எம்.ஆப்ரேஷன் சங்கீத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.