Rock Fort Times
Online News

கோவை அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு!

பள்ளிகளின் அடிப்படை கட்டுமானமும், மாணவர்களின் கற்றலும் மேம்பாடு அடைய வேண்டுமென்றால் களத்தில் இறங்கி அவர்களுடன் உரையாட வேண்டும், களத்தில் செயலாற்ற வேண்டும் எனும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழியில், தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் நோக்கத்தோடு 234/77 ஆய்வுப் பயணத் திட்டத்தை தொடங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் முதல் பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோவை தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வளாகத்திற்கு வந்த அமைச்சர் அங்கு பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் வருகை குறித்து கேட்டு அறிந்தார். மேலும் 8-ம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவரை புத்தகம் வாசிக்க வைத்தார்.‌ மேலும் பள்ளியில் உள்ள குடிநீர் வசதி, கழிவறைகளை பார்வையிட்டார். இந்நிகழ்வுக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ”இந்தப் பள்ளியில் கட்டிடங்களை இடித்து தரமான காங்கிரீட் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியில் சமையல் அறையை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்து உள்ளனர். அங்கு மின்சாரம் சரிவரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இதுகுறித்து கல்வி அலுவலர்களிடம் தெரிவித்துள்ளேன் என்றாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்