Rock Fort Times
Online News

தண்டனையை எதிர்த்து வழக்கு; ராகுல்காந்தி தொடர்ந்த மனு தள்ளுபடி…

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி, குஜராத் மாநிலம் சூரத் நகர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார். சிறை தண்டனையை எதிர்த்து சூரத் ஐகோர்ட்டில், ராகுல் அப்பீல் மனு தாக்கல் செய்தார். மனுவை ஐகோர்ட் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்த நிலையில், இந்த மனு மீது இன்று ( 07.07.2023 ) தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்