திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 15- க்கும் மேற்பட்ட அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளும் வழக்கமான சோதனை தான் எனவும், கொரோனா காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சோதனை நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் யாரேனும் அதிக அளவு நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளனரா? என்பது குறித்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதியம் 12 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Prev Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.