Rock Fort Times
Online News

காதல் மனைவியை கொலை செய்த கணவர் கைது…

திருச்சி பொன்மலைபட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். சதீஷ்குமார் மீது போலீஸ் நிலையத்தில் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இவர், சபுராபீவியை பொன்மலை பகுதியில் ரெயில்வேக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், சபுராபீவியை கீழே தள்ளி அவரது கழுத்தை சேலையால்  இறுக்கியும், தலையில் கல்லைப் போட்டும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்த தகவலின் பேரில், பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபுராபீவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை தேடி வந்தனர். இந்தநிலையில் தனிப்படை போலீசார் சதீஷ்குமாரை இன்று ( 04.07.2023 ) காலை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சதீஷ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்