Rock Fort Times
Online News

ரயில் தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ எடுத்தால் சிறை…!

ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை...

ரயில் தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ எடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

ரயில் பாதையை கடப்பது ரயில்வே சட்டப்படி குற்றம். ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்வது, விளையாடுவது, விளம்பர மோகத்தில் ‘செல்பி’ எடுப்பது போன்ற செயல்களால் பலர் உயிர் இழக்க நோ்கிறது. இதுபோன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபட வேண்டாம். மீறி செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல், ரயில் பாதையில் அல்லது ரயில் இன்ஜின் அருகே சென்று ‘செல்பி’ எடுத்தால் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்