திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாசன் வேலியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் ( வயது 40). வெங்காய வியாபாரி. இவரது மனைவி தனலட்சுமி. தனலட்சுமிக்கும், மற்றொருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிவலிங்கம் மனைவியை கண்டித்தார். இருந்தாலும் கள்ளக்காதல் தொடர்ந்து நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக சம்பவத்தன்று கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்து கட்ட தனலட்சுமி முடிவு செய்தார். அதன்படி, சம்பத்தன்று தனது கள்ளக்காதலன் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து சிவலிங்கத்தை அடித்து கொலை செய்தார். பின்னர் அவரது உடலை சாக்கு பையில் திணித்து கயிற்றால் கட்டி ஆம்னி வேனில் சுடுகாட்டிற்கு எரிக்க கொண்டு சென்றபோது சோமரசம்பேட்டை போலீசார் பிடியில் சிக்கினார். இந்த கொலை தொடர்பாக தனலட்சுமி மற்றும் ஆறுமுகம், சுமதி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலன் செந்தில்குமார் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பதுங்கி இருந்த செந்தில்குமாரை சோமரசம்பேட்டை போலீசார்
கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.