Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.22.52 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

கோலாலம்பூரில் இருந்து தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை இன்று ( 03.07.2023 ) காலை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 181 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி மற்றும்  பழைய செல்போனில் மெல்லிய தகடு வடிவில் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 382 கிராம். இவற்றின் மதிப்பு ரூ.22 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். அந்த பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்