கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் ஊர் பொதுமக்கள் சார்பில் தை மாத பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு மாடு,குதிரரை,சைக்கிள் ஆகியவற்றிற்க்கான மாபெரும் எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் மாடுகளுக்கான சிறிய மாடு, ஒத்தை மாடு, இரட்டை மாடு, மொத்தம் 20 வண்டிகள், 20 குதிரைகள் ,புதிய குதிரை, பெரிய குதிரை, சைக்கிள் ரேஸ், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்த எல்கை பந்தயப் போட்டியில் காளைகள் மற்றும் குதிரைகள் எல்லைக்கோட்டில் இருந்து சீறிப்பாய்ந்தன.சிறிய மாட்டிற்கு 5 மைல் தூரம், பெரிய மாட்டிற்கு 6 மைல் தூரம் ,இரட்டை மாட்டிற்கு 8 மைல் தூரம் , சிறிய குதிரைக்கு 10மைல் தூரநிர்ணயிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற குதிரை மற்றும் மாடு, சைக்கிள் ஆகியவற்றிற்கு பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது முடிவில் வெற்றி பெற்ற குதிரைகளுக்கும் மாட்டு வண்டி வீரர்களுக்கும் சைக்கிள் வீரர்களுக்கும் பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.