Rock Fort Times
Online News

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் ஆய்வு..

தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலானய்வுத் துறை காவல்துறை தலைவராக காமினி ஐ.பி.எஸ். பொறுப்பேற்றதிலிருந்து பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் ரேசன் பொருள்களை வாங்கி பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் விவசாயிகளிடம் போதுமான ஆவணங்களை பெற்றுக்கொண்டு மட்டும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், அவர்களிடம் கையூட்டு பெறாமலும், விவசாயிகளை காக்க வைக்காமலும், வியாபாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அறிவுரையின்படி திருச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் அடங்கிய குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நான்காவது முறையாக இன்று திருச்சி மாவட்டம் மணிகண்டம், மேக்குடி , ஓலையூர் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது முறைக்கேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்