தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஜிபி சைலேந்திரபாபு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுப்பிரிவு டிஐஜி, ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் சங்கர்ஜிவால். மன்னார்குடியில் காவல்துறை உதவி ஆணையராக பணியை தொடங்கியவர் சங்கர் ஜிவால். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஜிவால் 1990-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் ஆவார்

Comments are closed, but trackbacks and pingbacks are open.