Rock Fort Times
Online News

ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்க உத்தரவு!

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்திலிருந்து ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடையாள அட்டையில் தங்களின் புகைப்படத்துடன் துணைவரின் புகைப்படத்தையும் ஒட்டி புதிதாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்