சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவரது மகன் கார்த்திக் நிவேதன் (வயது 19). இவர் திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே பாத்திமா நகர் பகுதியில் உள்ள ஐ.ஐ.ஐ.டி. கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் மாணவர்கள் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். அவருடன் மேலும் 4 வடமாநில மாணவர்களும் ஒரே அறையில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் கார்த்திக் நிவேதன் உள்ளிட்ட 5 மாணவர்களும் தங்களது விடுதி அறையை பூட்டாமல் அவசரமாக கல்லூரிக்கு தேர்வு எழுத சென்று விட்டனர். பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது அறையில் வைத்திருந்த அவர்களின் விலை உயர்ந்த 5 லேப்டாப்புகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து கார்த்திக் நிவேதன் மணிகண்டம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லேப்டாப்புகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.