Rock Fort Times
Online News

திருச்சி, முக்கொம்பு அருகே ராணுவ வாகனம்- அரசு பேருந்து மோதல்… * 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு..!(வீடியோ இணைப்பு)

திருச்சியில் இருந்து கரூர் நோக்கி இன்று (26-11-2026) திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. முக்கொம்பு அருகே அல்லூர் என்ற இடத்தில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக ராணுவ வாகனத்தின் மீது மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில்
30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி- கரூர் நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்து செல்வதில் அதிக சிரமம் இருந்து வருகிறது.
இதுபோல ஏற்கனவே பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்