Rock Fort Times
Online News

திருச்சி கிழக்குத் தொகுதி த.வெ.க.சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி… * வேதாத்ரி நகர் பாலு ஏற்பாட்டில் நடைபெற்றது..!

திருச்சி மாநகரம், 32-வது வார்டுக்கு உட்பட்ட இருதயபுரம், எடத்தெருவில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், திருச்சி கிழக்குத் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. த.வெ.க பிரமுகர் வேதாத்திரி பாலு மற்றும் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 60-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நான்கு வகையான பழங்கள், பிஸ்கட், பிரட், பால் மற்றும் முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில்,திருச்சி கிழக்குத் தொகுதி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஏ.அன்னை தெரசா, ஸ்ரீரம்யா, பாலக்கரை பகுதி செயலாளர் பிரேம் குணா, ஏர்போர்ட் பகுதி செயலாளர் மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இணை அமைப்பாளர்கள் எம்.எஸ். ரேவதி, மேரி மெரினா, ரூபி, மயூரி, ரம்யா, சுதா, நீலாவதி, தமிழ்ச்செல்வி, பாலக்கரை பகுதி மகளிர் அணி அமைப்பாளர் பிரின்சிகா, பகுதி நிர்வாகி அனிதா, பகுதி பொருளாளர் பாண்டி செல்வி, பாலக்கரை வட்ட செயலாளர் பாரதி, துணை வட்ட செயலாளர் சந்திரலேகா உள்ளிட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கர்ப்பிணிப் பெண்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை கருத்தில் கொண்டு நடைபெற்ற இந்நலத்திட்ட நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்