Rock Fort Times
Online News

வ. உ. சி.நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை…!

சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், பொருளாளர் துரைராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், கருணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள் சித்ரா பாரி வள்ளல், டோல்கேட் சுப்பிரமணி, பகுதி செயலாளர்கள் மண்டி சேகர்,
கமால் முஸ்தபா, இளங்கோ, மோகன்தாஸ், துர்காதேவி, கலைச்செல்வி, கவிதா, சாதிக், முத்து, பழனி, சிந்தாமணி செந்தில், கார்த்திக், தஸ்தா பாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்