Rock Fort Times
Online News

‘தவறு செய்பவர்களின் கட்சி பதவி பறிக்கப்படுவதோடு நடவடிக்கையும் பாயும்’… * நிர்வாகிகளுக்கு தவெக தலைமை கடும் எச்சரிக்கை!

சமீப நாட்களாக தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வருவது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் தவெக அரசுக்கும், முதல்வர் விஜய்க்கும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு தவெக தலைமை கடும் எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் தெரிவித்துள்ளதாவது,

‘மாற்றத்திற்காக மக்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள். முதல்வர் விஜய் ஒருவருக்காகவே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். எனவே எதிர்பார்க்காமல் கட்சிப் பணிகளை செய்யுங்கள். நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் பதவிகளோ அல்லது அந்தஸ்தோ முதல்வர் விஜய் செய்து தருவார். அதே வேளையில் கட்சி நிர்வாகிகள் தவறாக நடப்பது, கட்சி விதிகளை மீறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பதவி பறிக்கப்படும். கட்சிப் பதவி பறிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் வரும் புகார்களை கட்சியின் தலைமை கூர்ந்து கவனித்து வருகிறது. கட்சி நிர்வாகிகள் மத்தியில் வரும் புகார்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என அனைத்து மாவட்ட மாநில நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்