Rock Fort Times
Online News

8 கிராம் தங்கம், ஒரு பட்டு புடவை ‘அண்ணன் சீர்’ திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?…

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த திட்டங்களில் ஒன்றான அண்ணன் சீர் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை ஆகியவற்றை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். திருமண தேதிக்கு 60 நாள்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம். மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் பயன்பெறாதவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்ப நிலை குறித்து முறைப்படி தெரிவிக்கப்படும். தகுதி இல்லாமல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் காரணம் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்