Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி 44-வது வார்டில் தீ விபத்தால் சேதமடைந்த வீடுகள்… * எம்.எல்.ஏ நவல்பட்டு விஜியின் நடவடிக்கையால் மறுவாழ்வு..!

திருச்சி மாநகராட்சி 44-வது வார்டுக்குட்பட்ட பொன்மலை, கணேசபுரம் பகுதியில் தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த திருவெறும்பூர் த.வெ.க.சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி இன்று (நவம்பர் 14) சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீடு இழந்து நிற்கதியாய் நின்ற மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், உடனடியாக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய எம்.எல்.ஏ, குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கித் தருமாறு உத்தரவிட்டார். தங்களின் மறுவாழ்வுக்கு உதவிய எம்.எல்.ஏ நவல்பட்டு விஜியின் இந்த உடனடி நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்