கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும், த.வெ.க. கூட்டணிக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், தற்போதைய ஆட்சியில் மாவட்ட கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக விமர்சித்தார். மேலும், “நான் கலெக்டராக இருந்திருந்தால் என்கவுன்டர் செய்திருப்பேன்; சுட்டுத் தள்ளியிருப்பேன். வீடு தேடி வந்து பிரச்சினை செய்தால் அவர்களை எப்படி வரவேற்க முடியும்? அந்தக் கலெக்டருக்கு எவ்வளவு மனவேதனை ஏற்பட்டிருக்கும். இந்த ஆட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் பாதுகாப்பில்லை; சாதாரண மக்களுக்கும் பாதுகாப்பில்லை” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

Comments are closed.