Rock Fort Times
Online News

பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை… முதல்வர் விஜய் செயலால் நிரூபிக்க வேண்டும்..!- மு.க. ஸ்டாலின் காட்டம்…

பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்டுவது சினிமா அல்ல என முதலமைச்சர் விஜயை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தவறு செய்தால் விடமாட்டேன் எனக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அந்தக் கண்டிப்பு உண்மையானதாக இருந்தால், பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீதும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்ததுதான் முதலமைச்சரின் கடும் நடவடிக்கையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை என்றும், உண்மையான நடவடிக்கைகளை எடுத்து தான் எவ்வளவு கண்டிப்பானவர் என்பதை முதலமைச்சர் விஜய் நிரூபிக்க வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை! என்றும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்