Rock Fort Times
Online News

செஞ்சியில் மீண்டும் ஷாக்.. 7 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயற்சி… கூக்குரல் எழுப்பியதால் மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், தனியாக நடந்து வந்த சிறுமியை ஆட்டோவில் ஏறுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அச்சமடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும், அந்த நபர்கள் ஆட்டோவில் வேகமாகத் தப்பிச் சென்று விட்டனர்.
வீட்டிற்குச் சென்ற சிறுமி, நடந்த சம்பவம் குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தந்தை செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, செஞ்சி அருகே ஆலம்பூதியைச் சேர்ந்த ஹேமலதா என்ற 7 வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி காணாமல் போய் 30 நாட்களான நிலையில், தேடும் பணியில் சிபிசிஐடி காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்