Rock Fort Times
Online News

திருவண்ணாமலை மகாதீபம்: பக்தர்கள் மலையேறத் தடை…!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நவம்பர் 24- ம் தேதி பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற காா்த்திகை தீப திருவிழா வருகிற நவ. 24 -ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூடுவார்கள். நவ. 24 அன்று மாலை 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அன்று பக்தர்கள் மலையேற தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் தீபத் திருவிழாவின் போது மலை ஏற பக்தா்களுக்கு இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்