Rock Fort Times
Online News

டாஸ்மாக் பணியாளர்களுக்கு இன்று (நவ.4 ) 20% தீபாவளி போனஸ்…!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுத் துறைகளில் பணபுரிபவர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் ஆகியோருக்கு 20 சதவீத போனஸ் தொகை வழங்கப்பட உள்ளது. இதன்படி 2025 ஏப்ரல் மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரையிலான ஓராண்டு காலக்கட்டத்திற்கான போனஸ் கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத் தொகை அடங்கும். இதன் அடிப்படையில் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 16 ஆயிரம் ரூபாய் போனஸ் தொகை வழங்கப்படும். மேலும், இதற்கான மாத அடிப்படை ஊதிய உச்ச வரம்பு 7 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் வங்கி கணக்கில் போனஸ் தொகை இன்று(04-11-2026) வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்