Rock Fort Times
Online News

400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து ஏன்? – தமிழக அரசு விளக்கம்…!

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் NAFED நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய வழங்கப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காயம் தரமற்றதாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த கொள்முதல் ஆணையை தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) ரத்து செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், NAFED (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு) நிறுவனத்திடம் இருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) வழங்கிய ஆணை, வெங்காயம் தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ளதாக கூறப்படும் தரமற்ற வெங்காயம் NAFED நிறுவனத்துக்கு சொந்தமானது. அது கூட்டுறவுத் துறையின் வெங்காயம் அல்ல. தரமான பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிப்பதன் மூலம் நுகர்வோர் நலனையும் கூட்டுறவு நிறுவனங்களின் நிதி நலனையும் பாதுகாக்க கூட்டுறவுத் துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்