தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று(03-11-2026) நேரில் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. போதைப் பொருள்களை இவர்களே விற்பனை செய்கிறார்கள். தமிழ்நாடு காவல்துறையினர் ஆட்சியாளர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்படுகிறார்கள். அவர்கள் நீதிமன்ற விசாரணையில் மாட்டிக் கொள்ளப் போகிறார்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அரிசி விலை அதிகமாக உள்ளது. உண்மையை வெளியே சொல்பவர்களை படத்தில் வருவது போன்று மிரட்டிப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டுக்கு வரும் முதலீடுகள் வெளி மாநிலங்களுக்குச் செல்கின்றன. தமிழ்நாட்டையே தனியார் மயமாக்க முதல்வர் திட்டமிடுகிறார். ஜனநாயகன் தயாரிப்பாளர் போன்ற ஒருவரிடம் தமிழ்நாட்டை கொடுத்துவிட்டு ஓய்வெடுக்கலாம் என்று முதல்வர் நடக்கிறார். ஆட்சிக்கு எதிராக பேசுபவர்களை மிரட்டிப் பார்க்கிறார்கள். பேராசிரியர் கலையரசனை கைது செய்தது சட்டத்துக்குப் புறம்பானது. மாநிலம் முழுவதும் பல இடங்களை சிறுமிகள் காணாமல் போனது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை சரி செய்வதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. எந்த அனுபவமும் இல்லாமல் சினிமாவிலிருந்து நேரடியாக அரசியலுக்கு வந்துள்ளார். வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. பட்டு வேட்டி சட்டை போட்டுக் கொண்டு ஜோதிடர் சொல்வதைக் கேட்டு ஆட்சி நடத்துகிறார்கள். குதிரை பேரம் புகார் குறித்து
உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். எந்தெந்த அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள், சொத்து சேர்க்கிறார்கள் aஎன்ற தகவல் எங்களுக்கு வருகிறது. அதையெல்லாம் தொகுத்து ஆளுநரிடம் புகார் அளிப்போம்” எனத் தெரிவித்தார்.

Comments are closed.