திருச்சி பிரபல மருத்துவர் எம்.ஏ. அலீமுக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது…* முப்பெரும் துறை அமைச்சர்கள் விருது வழங்கி பாராட்டு.!
‘தமிழ்ச்செம்மல் விருது’ என்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபடும் தமிழார்வலர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படும் சிறப்பு விருதாகும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் வளர்ச்சிக்காக உழைக்கும் சிறந்த தமிழார்வலர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் திருச்சியைச் சேர்ந்த பிரபல மூளை நரம்பியல் நிபுணரும், அறிவியல் தமிழ் எழுத்தாளரும், திருக்குறள் ஆய்வாளருமான பேராசிரியர் டாக்டர் எம்.ஏ. அலீம் உள்பட 76 தமிழ் அறிஞர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ‘தமிழ் செம்மல்’ விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள அருங்காட்சியகக் அரங்கத்தில் இன்று(01-11-2026) நடைபெற்றது. விழாவில், திருச்சி மருத்துவர் எம்.ஏ. அலீம் உட்பட 76 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருதுகளை தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Comments are closed.