Rock Fort Times
Online News

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வு… 846 பணியிடங்களுக்கு 4.89 லட்சம் பேர் போட்டி…!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நாளை (நவ.1) மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பிரிவுகளைச் சேர்ந்த 846 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை எழுத 4,89,897 பேர் விண்ணப்பித்த நிலையில், 4,89,885 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 1,84,131, பெண்கள் 3,05,719, மூன்றாம் பாலினத்தவர்கள் 35 பேர் ஆவர். இதற்காக
38 மாவட்டங்களில் 1,647 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 173 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுத செல்லும் பொழுது டிஜிட்டல், எலக்ட்ரானிக், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை அணிந்து செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் தேர்வறையை விட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்