கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் தனது பதவி காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில்
ரூபாய் 100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக
எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுக்க சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர.
இந்த மனு மீதான விசாரணை இன்று (அக்டோபர் 30) நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சார்பில்
ஆஜரான வழக்கறிஞர், ‘சிறையில் சரியான உணவு வழங்காததால் 2-4 கிலோ வரை அன்பில் மகேஷின் உடல் எடை குறைந்துள்ளது. அக்டோபர் 29ம் தேதியிலிருந்து நவம்பர் 2ம் தேதி வரை போலீஸ் காவல் கேட்டுள்ளனர். ஆனால் கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே அவரிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது.விசாரணைக்கும், சோதனைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டுள்ளதால், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘காவல்துறையினர் அன்பில் மகேஸிடம் அவரின் பினாமிகள் மற்றும் நெருக்கமானவர்கள் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. அதனால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நவம்பர் 2 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், காவல் வழங்குவது குறித்த இறுதி உத்தரவை நீதிபதி நவம்பர் 2-ம் தேதி வழங்கவுள்ளார்.

Comments are closed.