Rock Fort Times
Online News

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 8 கோடி லிட்டர் மழைநீர் சேகரிப்புக் குளம்… * மீன் வளர்ப்புடன் படகுச் சேவையும் தொடக்கம்..!

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில், சுமார் 8 கோடி லிட்டர் மழைநீரைச் சேமிக்கும் வகையில் 2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ‘மிகப்பெரிய குளத்தில் படகுச் சேவை தொடக்க விழா இன்று(29-10-2026) நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்வில் வேந்தர் சீனிவாசன் பேசுகையில், “250 ஏக்கர் பரப்பளவிலான பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வரும் மழைநீரைச் சேகரிக்கும் நோக்கில் இக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. 500 அடி நீளம், 250 அடி அகலம், 40 அடி ஆழம் கொண்ட இக்குளத்தில் சுமார் 8 கோடி லிட்டர் நீரைச் சேமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் மழைப்பொழிவில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொள்ள, கிடைக்கும் மழைநீரைச் சேமிப்பது அவசியம். இத்திட்டம் நீர் வீணாவதைக் குறைப்பதுடன், எதிர்கால நீர்த் தேவைகளைச் சமாளிக்கவும் உதவும்” என்றார். இக்குளத்தில் பல்வேறு வகையான மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது படகுச் சேவையும் தொடங்கப்பட்டுள்ளதால், மழைநீர் சேகரிப்பு, மீன் வளர்ப்பு மற்றும் படகுச் சேவை ஆகிய பல்நோக்குப் பயன்பாடுகளைக் கொண்ட நீர்நிலையாக இக்குளம் அமைந்துள்ளது.

குளத்தில் சேகரிக்கப்படும் நீர் மண்ணுக்குள் ஊடுருவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தவும் உதவும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், வளாகத்தில் உருவாகும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, பண்ணைக் குட்டையில் சேகரிக்கப்பட்டு விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்