Rock Fort Times
Online News

தீபாவளி பண்டிகைக்காக திருச்சி வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே 2 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. நவம்பர் 6-ம் தேதி இரவு 11.55 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக நவம்பர் 7-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், நவம்பர் 9-ம் தேதி இரவு 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 11.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் இந்தச் சிறப்பு ரயில்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்