Rock Fort Times
Online News

பால் பொருட்களின் விலை உயர்வு ஏன்? ‘ஆவின்’ விளக்கம்…!

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் தயாரித்து விற்கப்படும் 100 கிராம் நெய் ரூ.85-ல் இருந்து ரூ.95ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, 100 கிராம் ரசகுல்லா ரூ.45ல் இருந்து ரூ.50 ஆகவும், 100 கிராம் வெண்ணெய் ரூ.60ல் இருந்து ரூ.70 ஆகவும், கால் கிலோ குலோப்ஜாமுன் ரூ.100ல் இருந்து ரூ.115, கால் கிலோ மைசூர்பாக் ரூ.140ல் இருந்து ரூ.160, 200 மில்லி லிட்டர் லஸ்ஸி ரூ.20ல் இருந்து ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 மி.லி. ஆவின் நெய் ரூ.365-ல் இருந்து ரூ.400 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.35-ல் இருந்து ரூ.40, 250 கிராம் ஆவின் மைசூர்பா ரூ.140-ல் இருந்து ரூ.160 ஆகவும் அதிகரித்துள்ளது. 10 வகை மில்க் ஷேக்களின் விலை ரூ.30-ல் இருந்து 35 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தயிர் ரூ.120-ல் இருந்து 130 ஆக உயர்ந்துள்ளது. 200 மில்லி மோர் ரூ.8-ல்இருந்து 10 ஆகவும், பெட் பாட்டிலில் விற்கும் மோர் ரூ.12-ல் இருந்து 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை (அக்டோபர் 28) முதல் அமலுக்கு வருகிறது.

ஆவின் நிர்வாகம் விளக்கம்,

இந்த விலை உயர்வு ஏன் என்பது குறித்து ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஆவின் பால் உபபொருட்களின் விலைகளில் குறைந்த அளவிலான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பின்னரும், பிற கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களின் பொருட்களுடன் ஒப்பிடும்போது, ஆவின் உபபொருட்களின் விலை தொடர்ந்து குறைவாகவே
இருக்கிறது. விலைத் திருத்தத்தின் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுகாப்பதுடன், நுகர்வோருக்கு தரமான பால் உபபொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்