Rock Fort Times
Online News

அரிவாள், கத்தியுடன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை… திருச்சி மத்திய மண்டல காவல்துறை எச்சரிக்கை..!

தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அரசியல்வாதிகள் முதல் இளைஞர்கள் வரை தங்களது கருத்துக்களை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகின்றனர். அப்படி வெளியிடும் வீடியோக்களில் சில எல்லை மீறுவதும் உண்டு. பிறந்தநாள் விழாவின் போது பெரிய வாளால் கேக் வெட்டுவது, அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று அதனை வீடியோ எடுத்து பதிவிடுவது போன்ற சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை காவல்துறையினர் அவ்வப்போது கண்காணித்து தடுத்து வந்தாலும் இதுபோன்ற வீடியோக்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சமூக வலைதளங்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்சிப்படுத்தி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் வீடியோக்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை எச்சரித்துள்ளது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்