தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக மற்றும் திமுக சார்பில்
போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் பெற்றனர். ஆனால், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் 1157 வாக்குகளும், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுகந்தி 1772 வாக்குகளும் பெற்று படுதோல்வி அடைந்தனர். அதேபோல, நாம் தமிழர் கட்சி சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எம். கார்த்திகா 5268 வாக்குகளும், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட ஜானகிராமன் 1370 வாக்குகளும் பெற்று படுதோல்வி அடைந்தனர். இதன்மூலம்
இந்த நான்கு வேட்பாளர்களும் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனர்.

Comments are closed.