நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது. அதாவது அதிமுக 47 இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி 4 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்திலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. திமுக கூட்டணி 74 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழக வெற்றி கழகம் 107 இடங்களில் வெற்றி வாகை சூடியது. ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் மூன்று கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவரது இந்த முயற்சி அதிமுகவில் புயலை கிளப்பியது. பலர் அவரது முடிவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். முன்னாள் முதலமைச்சர்
ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். மேலும், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அ.ம.மு.க. வெற்றி வேட்பாளரும்
த.வெ.க நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இதனால் அதிமுகவின் பலம் குறைந்தது. இந்த நிலையில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில த.வெ.க. வெற்றி பெற்ற நிலையில் அந்தக் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. அதிமுக இரண்டு தொகுதிகளை இழந்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் இன்னும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற வேண்டி இருக்கிறது.

Comments are closed.