திருச்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்… ரயில்வே கோட்ட மேலாளர் தொடங்கி வைத்தார்..!
திருச்சியில் “பிளான்ட் ஏ பில்லியன் ” அமைப்பு சார்பில், ஸ்வச்சுதா பக்வாடா என்ற தலைப்பின்கீழ் தூய்மைப் பணியுடன் இணைந்து திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தில் ரயில்வே துறைக்கு சொந்தமான வளாகங்களில் 1 மில்லியன்(10 லட்சம்) மரக்கன்றுகள் நடும்திட்டம் இன்று(அக்டோபர் 9) துவங்கியது. இத்திட்டத்தினை திருச்சிராப்பள்ளி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் பாலக்ராம்நெகி
மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். முன்னதாக, பருவநிலை மாற்றம் மற்றும் எல்நினோ தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு, பசுமை இந்தியாவை உருவாக்குவதற்கு மரம் நடுவது நம் ஒவ்வொருவரின் கடமை, நாடு முழுவதும் தூய்மையை நிலைநாட்டுவதில் நமது பங்களிப்பும் அவசியம். அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்
கொண்டனர். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நட திட்டமிட்டு, தேசியக்கல்லூரி மாணவர்கள் 300 பேர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்வில் ரயில்வே கோட்டத்தை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.

Comments are closed.