தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் கடந்த ஆறாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று(அக்டோபர் 9) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் முன்னிலை பெற்றது. அதன் பிறகு மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முதல் சுற்றில் தமிழக வெற்றிக்கழகமே முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது சுற்று மற்றும் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை பெற்றார். அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை பெற்று வருகிறார். தற்போதைய 8வது சுற்று நிலவரப்படி தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகம் 21034 வாக்குகளும், அதிமுக 19730 வாக்குகளும், திமுக 17,898 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Comments are closed.