Rock Fort Times
Online News

மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்த திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவர்கள் … * 14 பதக்கங்கள் பெற்று அசத்தல்..!

தமிழ்நாடு அரசின் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்டம் மற்றும் மண்டல வாரியாக சமீபத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவில் .விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நீச்சல், ஜூடோ, ஜிம்னாஸ்டிக், டென்னிஸ், யோகாசனம், சிலம்பம், தடகளம், பளு தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் திருச்சி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவர்கள் 5 தங்கம்,3 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி மாணவி ஆர்.ருத்ராஸ்ரீ 200 மீட்டர் பிரஸ் ஸ்ட்ரோக் மற்றும் 400 மீட்டர் தனி நபர் மெட்லி ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதேபோல, ஜூடோ போட்டிகளில் ஜி.மதன் பாபு ஆர்.தமிழரசன் ஆகியோரும், ஜிம்னாஸ்டிக் போட்டியில் யு.அக்ஷயாவும் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.

ஜூடோ போட்டிகளில் பி.ஹரிஹரசுதன் எம்.சரண் ,
எஸ். சுமிதா ஆகியோர் வெண்கல பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர். டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சி.எஸ் சஞ்சனா வெள்ளி பதக்கமும், இரட்டையர் பிரிவில் இந்து சுரேகாவுடன் இணைந்து விளையாடியவர் தங்க பதக்கமும் வென்றுள்ளனர். அதேபோல் யோகாசன போட்டியில் கே.எஸ் சரத் வெள்ளி பதக்கமும், சிலம்பத்தில் எஸ்.சஞ்சய் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர். தடகளப் போட்டிகளில் வட்டு எறிதழில் பி.ஹரிஹரன், குண்டு எறிதழில் கே.கபிலேஷ் ஆகியோர் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். பளு தூக்குதல் போட்டியில் எஸ்.யுகேஷ் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனை புரிந்த மாணவ, மாணவியர்களையும், பயிற்சியாளர்களையும் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், துணை பதிவாளர், மற்றும் மாணவர் நலன் புல முதல்வர், அனைத்து துறை தலைவர்களும், சக மாணவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்