Rock Fort Times
Online News

திருச்சியை வறட்சி மாவட்டமாக அறிவித்து நஷ்டஈடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்… * குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்..!

திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று(08-10-2026) விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள், வேளாண்துறை, நீர்வளத்துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் திரளாக பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில், மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடிக்கு கீழே சென்று விட்டது. இன்னும் ஐந்து நாட்களுக்கு கூட தண்ணீர் திறந்துவிட வாய்ப்பே இல்லை. திருச்சி மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க பரிந்துரைசெய்து விவசாயிகளுக்கு நஷ்டஈடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும், உறையூரில் உள்ள சித்தர் கோவில் பகுதியில் வேலி போடாத காரணத்தினால் கஞ்சா மற்றும் போதை விற்பனை, சட்டவிரோத செயல்களும் நடைபெறுவதால் காவல்துறை அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி – கோதாவரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிதி கேட்டு போராடினால் விவசாயிகளை சிறை வைப்பது மட்டுமல்லாமல் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட கூடாது. மேகதாது அணை கட்ட மார்ச் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டுவோம் என்று அம்மாநில அமைச்சர் கூறி இருந்த நிலையில் அவ்வாறு செயல்படுத்த தொடங்கினால் அங்கு சென்று தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் கூறினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்