தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் 81-வது பிறந்தநாள்…* பெரம்பலூரில் கோலாகல கொண்டாட்டம்..!
பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு தனலெட்சுமி சீனிவாசன் தொழில் குழுமம் செயல்பட்டு வருகிறது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், சிட்பண்ட்ஸ், பார்மா, சர்க்கரை ஆலை, கட்டுமான நிறுவனம் மற்றும் ஹோட்டல்கள் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் நிறுவனரான தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசனின் 81வது பிறந்தநாள் இன்று (அக்டோபர் – 07) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் – துறையூர் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழாவில், இவரது மகனும், மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான எஸ்.கதிரவன் – அனந்தலெட்சுமி கதிரவன், மகள்கள் மற்றும் மருமகன்களான ஜெயந்தி – நீல்ராஜ், ஆனந்தி -ராஜபூபதி சுகந்தி – மணி, மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இவ்விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், நண்பர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தனலெட்சுமி சீனிவாசன் குழும நிர்வாகிகளும், ஊழியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.