நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, தவெக வேட்பாளர் சிந்தாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவருடைய மனுவை நிராகரிக்கக் கோரி திமுக எம்எல்ஏ ரகுபதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ரகுபதியின் மனுவை ஏற்றுக் கொண்டு, தவெக வேட்பாளர் சிந்தாமணியின் தேர்தல் வழக்கை நிராகரித்து அண்மையில் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று( அக்டோபர் 7) நீதிபதிகள் பிரசாந்த்குமார் மற்றும் ஸ்ரீசந்திரசேகர் அடங்கிய அமர்வு விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments are closed.