Rock Fort Times
Online News

திருச்சி, திருவானைக்காவல் கோவிலில் ‘கலைமாமணி’ ரேவதி முத்துசுவாமி மாணவிகளின் பரதநாட்டிய சலங்கை பூஜை…!

திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் கலைமாமணி ரேவதி முத்துசுவாமி மாணவிகளின் பரதநாட்டிய சலங்கை பூஜை சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா மாணவிகள் அத்விதா, பிரியதர்ஷினி, ஆர்.எஸ்.எழில், எஸ்.ஹரிணி, எஸ்.எஸ். கிருஷ்ணிகா, ஆர்.எஸ்.மகிழ், பிரகிருதி அஸ்வின் ஐயர், எஸ். ரம்யா அய்யங்கார், வி. சஞ்சனா மீனாட்சி, எஸ். ஸ்வஸ்திகா ஸ்ரீ, டி.எஸ். திவர்ஷனா, ஆர். யாழினி ஆகியோர் தங்களது நாட்டியப் பயணத்தின் முக்கிய மைல்கல்லான சலங்கை பூஜையை நிறைவேற்றினர்.

இந்நிகழ்வில் திருக்கோவிலின் உதவி ஆணையர் உமா மற்றும் பிரபல கண் மருத்துவர் பார்வதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவிகளை வாழ்த்தினர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியை ஜனனி, ரேவதி முத்துசுவாமி மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்