Rock Fort Times
Online News

3 நாட்கள் தொடர் விடுமுறை; அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 5700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி( வெள்ளிக்கிழமை) வருகிறது. 2-ம் தேதி அரசு விடுமுறையை தொடர்ந்து சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் வருகிறது. மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால், ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு அக்டோபர் 1ம் தேதி 1,580 பேருந்துகளும், 2ம் தேதி 745 பேருந்துகளும், 3ம் தேதி 895 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு அக்டோபர் 1ம் தேதி 220 பேருந்துகளும், 2ம் தேதி 115 பேருந்துகளும், 3ம் தேதி 115 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாதவரத்தில் இருந்து அக்டோபர் 1ம் தேதி 185 சிறப்பு பேருந்துகளும், 2 மற்றும் 3ம் தேதிகளில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் தலா 90 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக அக்டோபர் 4ம் தேதி அனைத்து பகுதிகளில் இருந்தும் பயணிகளின் தேவைக்கேற்ப 1,471 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்