Rock Fort Times
Online News

வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு – இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு…!

வாரத்திற்கு 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டுமென்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி, செப்டம்பர் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிவரை வேலை நிறுத்த போராட்டத்தை வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) அறிவித்திருந்தது. இதன் காரணமாக செப்டம்பர் 26 மற்றும் 27 தேதிகளில், அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வங்கிகள் முழுநேரமாக செயல்பட்டன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திய வங்கிகள் சங்கத்துடன் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதாகவும் AIBEA தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
இதனையடுத்து வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்