‘ஜெம்’ வீரமணி வழக்கில் முதல்வர் விஜய், 2 அமைச்சர்களை விசாரிக்க வேண்டும்… சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் திமுக தரப்பில் மனு…!
வீரமணி போக்சோ வழக்கில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் விசாரிக்க டி.ஆர்.பாலு சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் மனு அளித்துள்ளார். அம்மனுவில் குறிப்பிடப்பட்டு
உள்ளதாவது:- கடந்த செப்டம்பர் 25-ம் தேதி முதலமைச்சர் விஜய் பேசுகையில்,
ஜெம் வீரமணியைத் திமுக பாதுகாத்ததாகப் பொதுவெளியில் குற்றஞ்சாட்டினார். அதேநாளில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஜெம் வீரமணியைக் கழகம் பாதுகாத்ததோடு, அவர் மீதான வழக்கையும் தவறாக முடித்து வைத்ததாகக் குற்றஞ்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 26-ம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஜெம் வீரமணியைப் பாதுகாப்பதற்காகதிராவிட முன்னேற்றக் கழகம் அவரிடமிருந்து 500 கோடி ரூபாய் பெற்றதாகக் குற்றஞ்
சாட்டியுள்ளார். பொதுவெளியில் இவர்கள் மூவரும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. எங்கள் கழகத்தின் மீதும் மற்றும் கழகத் தலைவர்கள் மீதும் அவதூறு பரப்ப முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மூவரிடமும் இந்தக் குற்றம் தொடர்பான மிகமுக்கியத் தகவல்கள் உள்ளன. ஆனால் போக்சோ சட்டப்படி அவற்றை விசாரணை அதிகாரியிடம் கொடுக்கவில்லை. புலனாய்வு அதிகாரியின் கேஸ் டைரியில் உள்ள விசாரணைத் தகவல்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் கிடைக்கிறது. அவற்றைப் பொது வெளியில் பரப்புகிறார்கள். மாநிலத்தின் முதலமைச்சரும், இரு அமைச்சர்களும் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டுகள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எனவே, இக்குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையான ஆதாரங்கள் ஆவணங்கள் மற்றும் தகவல்களை அவர்களிடமிருந்து உடனடியாகப் பெறுவது அவசியமாகும். அவர்களிடம் ஆதாரங்கள் உள்ளனவா? இருந்தால், அவற்றை இதுவரை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்காதது ஏன்? விசாரணை தொடர்பான ரகசிய ஆவணங்கள் இவர்களுக்கு அனுமதியின்றிக் கிடைத்துள்ளனவா? அவற்றிலுள்ள தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளனவா? ஆகிய கேள்விகளுக்கும் விடை காண வேண்டும். சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ள இவ்வழக்கில், ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கோஇடமளிக்காமல் அவற்றை உடனடியாகச் சேகரிக்க வேண்டும். அதுதான் விசாரணை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கக் கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான நிலைப்பாடு. அதேவேளையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் எத்தகைய உயர்பதவியில் இருந்தாலும், அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஆகவே, முதலமைச்சர் மற்றும் இரு அமைச்சர்கள் உள்ளிட்ட மூவரையும் “சம்மன்” செய்து விசாரிக்க வேண்டும் என்று அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.