Rock Fort Times
Online News

நாளுக்கு நாள் உயர்வு: ‘அதிர வைக்கும் அரிசி விலை’…- இல்லத்தரசிகள் கவலை!

தமிழக மக்கள் விரும்பி சாப்பிடுவது அரிசி சாதம். வீடு முதல் கல்யாண பந்தல் வரை அரிசி சாதம் தான் இன்றளவும் பரிமாறப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் அதிகளவு விளைவிக்கப்படுகிறது. அண்மை காலமாக தமிழகத்தில் போதிய மழை இல்லாததாலும் மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததாலும் பயிர் சாகுபடி பெருமளவில்
பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கிணற்றுப் பாசனத்தை வைத்து நெல் விளைவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விளைவிக்கப்படும் அரிசி நமது தேவைகளுக்கு போக பிற மாநிலங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு அரிசி மூட்டைகள் வருகின்றன. தமிழகத்தில் கர்நாடகா பொன்னிக்கு நல்ல கிராக்கி உள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் அண்மைக் காலமாக நிலவும் வறட்சி காரணமாக அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.40 வரை விற்ற தஞ்சாவூர் பொன்னி தற்போது 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கர்நாடக பொன்னி, நாட்டுப் பொன்னி ஆகிய அரிசி வகைகளின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த 50 நாட்களுக்கு முன்பு கர்நாடகா பொன்னி கிலோ 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ 85 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. நாட்டுப் பொன்னி அரிசி வகை 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 90க்கு விற்கப்படுகிறது. 35 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த இட்லி அரிசி தற்போது கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்