தாராபுரம் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவின் கார் மீது தாக்குதல்: அ.தி.மு.க வேட்பாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு…!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், கடந்த 9-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 16-ம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. 17-ம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. நாளை(19-09-2026) மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய சென்ற போது த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவின் கார் மீது அ.தி.மு.க.வினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவின் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சத்யபாமா, அ.தி.மு.க சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தார். தற்போது த.வெ.க சார்பில் மீண்டும் அத்தொகுதியிலேயே போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.