Rock Fort Times
Online News

சமயபுரத்தில் பயங்கரம்: மதுக்கடை அருகே வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை…!

திருச்சி மாவட்டம், மருதூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் பிரகாஷ் என்ற வாலிபர் இன்று(14-09-2026) சமயபுரம், நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு மது வாங்கச் சென்றுள்ளார். அப்போது மதுபானக் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரும் வரிசையில் நின்றபோது, பிரகாஷிற்கும், அங்கிருந்த சிலருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றிய நிலையில், கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பிரகாஷின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடி விட்டார். இதில், கழுத்தில் பலத்த காயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மதுபானக் கடை அருகே பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் போலீசார், பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்