தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, மதுராந்தகம் தொகுதியில் கோ.ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு.கார்த்திகா மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் ச.கார்த்திக் குமாரி ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் ஏற்கனவே தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

Comments are closed.