மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு… யார் இந்த கனிதா சம்பத், பானுமதி?
தமிழகத்தில் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு கனிதா சம்பத்தும், தாராபுரம் (தனி) தொகுதிக்கு பானுமதியும் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்க்கை குறிப்பு விவரம் வருமாறு:-
கனிதா சம்பத்,
அதிமுக மகளிர் அணி மாநில இணைச் செயலாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான கனிதா சம்பத் கடந்த 1996-ம் ஆண்டு அதிமுக சார்பில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அதிமுக மாவட்ட பிரதிநிதி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2001-2006 காலகட்டத்தில் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியிலும், 2011-2016 காலகட்டத்தில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2021 மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல்களில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட கட்சி தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் சென்ற தேர்தல்களில் மரகதம் குமரவேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அதிமுகவில் செயல்பட்டு வரும் கனிதா சம்பத்துக்கு, தற்போது மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பானுமதி,
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு 12-வது வார்டு முன்னாள் உறுப்பினர் ஆவார்.
முன்னாள்சட்டமன்ற உறுப்பினரான கனிதா சம்பத்தின் அரசியல் அனுபவமும், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றிய அனுபவமிக்க பானுமதியின் மக்கள் தொடர்பும் இத்தேர்தலில் கழகத்திற்குப் வெற்றியைத் தேடித் தரும் என அதிமுக எதிர்பார்க்கிறது.

Comments are closed.